உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் சொத்துக்கள்

148 0

ராஜபக்சக்களின் சொத்துக்கள் அனைத்தும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு மூன்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள் சுமார் டொலர் பெறுமதியான முத்திரையிடப்பட்ட பொருட்களை இலங்கையிலிருந்து உகாண்டாவிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் திருப்பதிக்கு பயணித்த தனியார் ஜெட் விமானம் உகண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

பெப்ரவரி 2021 இல், கொழும்பில் இருந்து உகாண்டாவிற்கு 102 அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியை விமான நிறுவனம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது இலங்கைக்கும் நிறுவனமொன்றிற்கும் இடையிலான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் முற்றிலும் வணிகச் செயல்முறை என்றும்,வணிக நோக்கங்களுக்காக மட்டுமே சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் விமான நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.