உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் – ஐ.நா. தகவல்

200 0

தங்கள் நாட்டு மண்ணில் தாக்குதல் நடத்தினால் உக்ரைன் தலைநகர் கீவ் மீது பதிலடி கடுமையாக இருக்கும் என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 50 நாளுக்கு மேலாகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவுடனான போரினால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் போலந்து, ஹங்கேரி, சுலோவேகியா, ருமேனியா மற்றும்  மால்டோவா ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டில் அகதிகளாக சென்றுள்ளனர்.