அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

186 0

காவல்துறையில் பல்வேறு சீர் திருத்தங்களை திமுக அரசு செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். திரும்பும் வழியில் அம்பத்தூர் காவல்நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அம்பத்தூர் காவல் அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார். அப்போது அங்கு பணியில் இருந்தவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் காவல்துறையினர் பல்வேறு சீர் திருத்தங்களை செய்து வருவதாகவும், நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் காவல்நிலையத்தில் பார்வையிட்டு ஆயவு செய்ததோடு, காவல்துறையினரின் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பட்டுள்ளார்.