சாக்லேட் வாங்க இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன்

222 0

சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் அவனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள்  சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
எமன் ஹொசைன் என்ற சிறுவன் இந்தியா – வங்கதேச நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைக் குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகில் உள்ள வங்காளதேச கிராமத்தில் வசித்து வந்துள்ளான். இந்தியாவில் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் கலம்சௌரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் இந்திய சாக்லேட் ஒன்றை வாங்குவதற்காக ஷால்டா நதியை கடந்து வந்துள்ளான்.
எல்லைப்பகுதியில் முள்வேலியில் உள்ள துளை வழியாக பதுங்கிச் சென்று அதே வழியில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த அந்த சிறுவன் இந்தமுறை பிடிபட்டான்.சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் அவனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.  மேலும் சிறுவன் காணவில்லை என வங்கதேசத்தில் இருந்து எந்த புகாரும் தரப்படவில்லை என கூறியுள்ளனர்.