கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

261 0

நுவரெலியா, கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி தேவை என கொட்டகலை பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி, ஒரு வாரத்திற்குள் நவீன முறையிலான புதிய அம்புலன்ஸ் வண்டியினை நேற்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இதற்கு நன்றி கூறும் நிகழ்வும், அம்புலன்ஸ் வண்டியினை பொதுமக்கள் சேவைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி.சாவித்ரி தலைமையில் இன்று நடைபெற்றது.

கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உலங்கு வானூர்தி காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலய மைதான வளாகத்தில் தரையிறக்கப்பட்டது.

வானூர்தி தரையிறங்கியதை கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்தில் கூடினர். இதன்போது அவ்விடத்தில் தறையிறங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நட்பு ரீதியாக இவர்களுடன் உரையாடினார். இதன்போது அவர்களின் குறைநிறையைக் கேட்டறிந்த ஜனாதிபதி உடனடியாக ஆவணை செய்ததாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கொட்டகலை மாணவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.