யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

320 0

வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதல் மற்றும் நீர்வளம் அழிந்து போகாது பாதுகாத்தல் தொடர்பான வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, யாழ்ப்பாண பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்று ஆரம்பமானது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இன்றைய ஆய்வரங்கம் ஆரம்பமானது.

இன்று ஆரம்பமான வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, நாளையும், நாளை மறுதினமும் என தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண முதலமைச்சருடன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன், உள்ளிட்டோர் முதன்மை விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இவர்களோடு இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.