2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும்-மைத்ரிபால சிறிசேன

302 0

அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும் 2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும். அதற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவருக்கும் நினைத்துப்பார்க்கவும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்த போதும் மக்கள் விருப்பத்தில் தெரிவான புதிய அரசாங்கம் முன்னேற்றத் திட்டங்களுடன் நாட்டை முன்கொண்டு செல்கையில் குறுகிய அரசியல் நோக்கங்களை மறந்து அந்தத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டை விரும்பும் அனைத்து அரசியல்வாதிகளினதும் பொறுப்பு என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

ஊவா வெல்லஸ்ஸவை மீண்டும் விவசாயத் துறையில் முன்னேற்றி அந்த மக்களின் வாழ்க்கையை சுபீட்சமடையச் செய்வதற்காக 31,000 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது