கொழும்பில் விஷேட போக்குவரத்து நடவடிக்கை

243 0

இலங்கையின் 69வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இதன்பொருட்டு, இன்று முதல் விஷேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே சில வீதிகள் மூடப்படும் என்பதால் மாற்று வீதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி,

04.02.2017 அன்று காலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை மூடப்படும் வீதிகள்

01) காலிவீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை

02) சைத்தன்ய வீதி

(மேலும் குறித்த வீதி ஒத்திகை தினங்களான 28, 29ம் திகதிகளில் ஏழு மணித்தியாலங்களுக்கும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் ஒன்பது மணித்தியாலங்களுக்கும் மூடப்படவுள்ளது.)

காலை 07.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை மூடப்படும் வீதிகள்

03) கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்குள் நுழையும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

04) கொள்ளுப்பிட்டி ஷாந்த மைக்கல் சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதிக்கு நுழையும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

05) ரோடுன்டா சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதிக்கு செல்லும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

06) செரமிக் வீதியில் இருந்து (லோட்டஸ்ட் வீதி) பழைய பாராளுமன்ற வீதி வரை

07) யோர்க் வீதியில் இருந்து இலங்கை வங்கி மாவத்தை வரை (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

08) சீனோர் சந்தியில் இருந்து (கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்) சீ.ரி.ஓ சந்தி வரையான பாதை (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

09) கோட்டை சீ.ரி.ஓ சந்தியில் இருந்து செரமிக் சந்தி வரையான வீதி (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

10) மாகன் மாகர் மாவத்தை, உத்தரானந்த மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு செல்லும் வீதி ((அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மூடப்படும் வீதிகள்

11) காமினி சுற்றுவட்டத்தில் இருந்து டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தைக்கு செல்லும் வீதி (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

12) கொம்பனிவீதி பொலிஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ரீகல் சந்திவரை