மிலேனியம் சவால் – வடக்கில் ஆய்வு

242 0

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பழங்கள் பதனிடும் மையம் ஆகியவற்றுக்குச் சென்று முதலீடுகள், வர்த்தக முயற்சிகள், வேலை வாய்ப்புகள் குறித்த நிலைமைகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.