சிரிய அகதிகளை தடுக்க ட்ரம்ப் உத்தரவு

254 0

இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் புதிய உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவ அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ் இராணுவ தலைமையகமான பென்ட்டகன் நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இந்த நிகழ்வின் குறித்த உத்தரவில் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டில் அமெரிக்கா ஏற்கக்கூடிய அகதிகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அவர் குறைந்துள்ளார்.

தமது நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணிப்பு நடைமுறைகளை கடுமையாக்கும்வரை, சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இருப்பினும், எதிர்காலத்தில் அகதி அந்தஸ்துகோரி சிரியாவிலிருந்து விண்ணப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில், அவர்கள் சுற்றுலா பயணிகளாக இருந்தாலும், குடியேறிகளாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகளான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வர அமெரிக்காவுக்கு வர முயற்சிப்பவர்களுக்கு, விண்ணப்பித்த 30 நாட்கள் வரை விசா வழங்கப்பட மாட்டாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.