அடுத்தவாரம் முதல் அரிசி விலை குறைப்பு

223 0

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையை அடுத்தவாரம் முதல் 10 ரூபாவால் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அடுத்த வாரம் முதல் சந்தையில் கொள்வனவு செய்ய முடியும்.

மொத்தவிலை 10 ரூபாவாக குறைக்கப்படுகின்ற நிலையில், அதற்கு ஏற்றவாறு சில்லறை விலையும் குறைக்கப்படும்.

சந்தையில் விநியோகம் அதிகரிக்கும்போது அரிசியின் விலை மேலும் குறையும் என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி 15 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியை 76 ரூபாவுக்கு அதிகமான விலையில் விற்க முடியாது என ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.