ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

262 0

புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த ஈழத் தமிழருக்கு 30 ஆயிரம் யூரோக்களை அதாவது 48 இலட்சம் இலங்கை ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் திருப்பியனுப்பப்பட்டதை மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனத்தை மீறியதாக கருதிய நீதிமன்றம், வழக்காடல் கட்டணமாக மேலும், 4 ஆயிரத்து 770 யூரோக்களை அதாவது 7 இலட்சத்து 60 ஆயிரம் இலங்கை ரூபாவையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஈழத் தமிழர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 2009ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.

இதையடுத்து, புகலிடம் கோரி அரசாங்கத்திடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆனால், அவரது விண்ணப்பத்தை நிராகரித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பியது.

இதையடுத்து, இலங்கை வந்த அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈழத் தமிழருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புகலிடம் அளிக்காமல், தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.