இலங்கையில் ஊழல் அதிகரிப்பு

227 0

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக ஊழல் தரவு பட்டியலுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

2015 ஆம் ஆண்டில் உலக ஊழல் தரவவு பட்டியலில் 167 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. எனினும், 2016 ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 95வது இடம் கிடைத்துள்ளது.

இதேவேளை, 2015இல் 76 ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2016இல் 79வது இடத்தில் உள்ளது.

அரசாங்க அதிகாரத்தை தனிப்பட்ட நன்மைக்காக பயன்படுத்துவது இந்த தரவின் ஊடாக கணக்கிடப்படுகிறது.

உலகில் ஊழல் அற்ற நாடுகள் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றது.

உலகில் அதிக ஊழல் மிக்க நாடாக சோமாலியா காணப்படுவதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.