மொரவக்க – நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் , திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் மொரவக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது திடீர் சுகவீனமுற்ற நிலையில் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 36 வயதுடைய , மொரவக்க – நெழுவ வீதியைச் சேர்ந்தவராவார்.
இவரது மரணத்திற்கான காரணம் இதய நோய் என்று பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.