அடுத்த வாரம் முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

185 0

எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடுதழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

எரிபொருள் பற்றாக்குறை என தொடர்ந்து எம்மால் புலம்பிக்கொண்டிருக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

மருதானை சனசமூக கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் கொள்வனவிற்காக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சுழற்சி முறையில் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் இவ்வாரத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

எரிபொருள் தட்டுப்பாடு என எம்மால் தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்க முடியாது.

ஐ.ஓ.சி நிறுவனம் எவ்வித கட்டுப்பாடுமின்றி எரிபொருள் விலையினை அதிகரித்த வண்ணம் உள்ளது, சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், மறுபுறம் லீசிங் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு இவ்வார காலத்திற்குள் அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடுதழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட ஏனைய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம் என்றார்.