பதவிக் காலம் நிறைவடையும் வரை ஆட்சிமாற்றம் ஏற்படாது – எஸ்.எம்.சந்திரசேன

193 0

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 113 பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றிற்குள் நிரூபிப்பது சாத்தியமற்றது.

எனவே பதவி காலம் நிறைவடையும் வரை ஆட்சிமாற்றம் ஏற்படாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தம்மிடம் பெரும்பான்மை பலம் உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

கப்பல் மூழ்கும் போது தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இருந்துக்கொண்டு இவர்கள் செயற்படுகிறார்கள்.

பங்காளி கட்சிகளுடன் இணக்கமாக செயற்படும் வகையில் 113 பெரும்பான்மை தம்மிடம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

பாராளுமன்றில் 113 பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக்கொள்வது இலகுவானதொரு விடயமல்ல.

2018ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு பாராளுமன்றில் 113 பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தற்போதைய அரசாங்கம் அப்போது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

அரசாங்கம் பதவி காலம் முழுமையாக நிறைவு பெறும் வரை ஆட்சியில் இருக்கும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தை கவிப்பது என்பது வெறும் பகல் கனவு.எரிபொருள்,எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட்டதல்ல , சமூக கட்டமைப்பில் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு புத்தாண்டு காலத்திற்கு முன்னர் தீர்வுகாண அரசாங்கம் பொருத்தமான திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் இனி முன்னெடுக்கப்படும்