அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

145 0

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் நலமாக உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு இல்லை.

இதையொட்டி ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.