350 கிலோ கிராம் கொக்ஹெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

179 0

கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத் தந்த கப்பலொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிலோ நிறையுடைய கொக்ஹெய்ன் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கொக்ஹெய்னின் பெறுமதி 6 பில்லியன் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பலானது, இந்தியாவை நோக்கி செல்லவிருந்தாக தெரிவித்துள்ள சுங்க திணைக்களத்தின் துறைமுக கட்டுபாட்டு பிரிவினர், அந்த கப்பலிலிருந்த இரும்புகளுக்கு மத்தியில் இந்த கொக்ஹெய்ன் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.