பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

188 0

பல்கலைக்கழகங்களில் 16.6 விகிதம் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், 21 விகிதம்  பேர் வாய்மொழி பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர், 1.5 விகிதம்  பேர் பகிடிவதை விளைவாக பாலியல் நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் UNICEF பிரிவால் தொகுக்கப்பட்ட அறிக்கை இதை குறிப்பிடுகிறது.

பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளின் பரவல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி,

கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 51விகிதம்  க்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3விகிதம்  உளவியல் வன்முறைக்கும், 23.8விகிதம்  உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6விகிதம்  பகிடிவதை விளைவாக பாலியல் துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர்.

மேலும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர், மேலும் கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது.