9 மாதங்களாக கட்சிப்பணி எதுவும் செய்யவில்லை- 4 மாவட்ட செயலாளர்கள் மீது துரை வையாபுரி தாக்கு

192 0

உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராகவே பணியாற்றினார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்து மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 4 பேர் அதிருப்தியாக செயல்படுவது ஏன் என்பதற்கு துரை வையாபுரி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டிருந்த குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார். அவருக்காக சிவகங்கை தொகுதி கடைசி வரை கேட்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இது அவருக்கும் தெரியும்.

வாய்ப்பு கிடைக்காத மனவேதனையில் இருந்தார். அவரை பலமுறை வைகோ சமதானப்படுத்த முயற்சித்தார். அப்படியிருந்தும் சிவகங்கையில் தேர்தல் பணியாற்றவில்லை. கடந்த 9 மாதங்களாக கட்சி பணி எதுவும் செய்யவில்லை. கட்சியின் சார்பில் அழைப்பு விடுத்தும் எந்த கூட்டத்திலும் அவர் பங்கேற்கவும் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராகவே பணியாற்றினார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்து மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் வைகோ தாயுள்ளத்தோடு காலப் போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறிவந்தார். செவந்தியப்பனை சமாதானப்படுத்த நானே சென்று பேசினேன். 3 மணி நேரம் அவருடன் பேசினேன். மிட்டாய்க்காக சிறுபிள்ளை அழுவதைபோல் திரும்ப திரும்ப தனக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை என்பதையே கூறினார்.

1700 பொதுக்குழு உறுப்பினர்களில் 10 பேரை தவிர அனைவரும் தலைமை மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கும் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடைய நடவடிக்கையால் நிர்வாகிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். பொதுக் குழுவில் நிச்சயம் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.