மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

236 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புடினின் வாழ்த்து செய்தியில், தனது மனமார்ந்த இந்திய குடியரசு தின விழா வாழ்த்துக்களை ஏற்றுகொள்ளுங்கள் எனவும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா ஆக்கபூர்வமாக முக்கிய பங்காற்றுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான ரஷ்யாவின் வெளிவிவகார கொள்கைகளில் நிலவும் சிறப்பான ஒத்துழைப்பிற்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் எனவும் புடினின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.