போர் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் உள்வாங்கல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானமே இறுதியாக இருக்கும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போர் குற்ற விசாரணைக்கான உள்நாட்டு பொறிமுறையின் போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியானது என அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.