இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி

300 0

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

68ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சராசரி நபர் வருமானம் கடந்த 60 ஆண்டுகளில் 10மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு பொருட்கள் எற்றுமதியில் இந்தியா முன்னிலை வகித்து வருவதாகவும், ஜனநாயகத்தில் உரிமைகள் உள்ளது போல் கடமையும் பொறுப்பும் உண்டு எனவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தியா அறிவியல் தொழில்நுட்ப வளம், அணுசக்தி துறையில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வறுமைக்கு எதிரான தமது யுத்தம் இன்னும் முடிவடையவில்லை எனவும் பண மதிப்பு இரத்து நடவடிக்கையால் தற்காலிகமாக பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பண மதிப்பு இரத்து நடவடிக்கையால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படும் எனவும் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சி அவசியமானது எனவும் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிவார்ந்த மக்களை உருவாக்க உதவும் எனவும் ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.