செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து

413 0

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன என தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய சூழலியலாளர் ரேவதி மாரிமுத்துவின் கேள்வியெளுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்ககைல்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘தாய் மண்’ எழுச்சிப் பேருரையை தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய சூழலியலாளர் திருமதி ரேவதி மாரிமுத்து வழங்கிய போது இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

விவசாயிகள் பலருக்கு விவசாயத்தில் மாற்று வழிகளைக் காட்டி அவர்களின் வாழ்வில் மாற்றத்ததை ஏற்படுத்தியுள்ள இவர் சூழல் நேய விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மை என்பவற்றிற்கு செயல்முறை அனுபவங்கள் மூலம் வழிகாட்டிவருகிறார்.
யாழ்ப்பாண விஞ்ஞானசங்கத்தின் பிரிவு டி ஒழுங்கு செய்திருக்கின்ற எழுச்சிப் பேருரை நிகழ்வை விவசாயத்துறை பேராசிரியர் ஞா.மிகுந்தன்  தலைமையில் நடைபெற்றது.

தொடக்கவுரையை பேராசிரியர் தி. வேல்நம்பி வழங்கினார். யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் பிரிவு டி தலைவர் சிரேஷ்டவிரிவுரையாளர் ஜனனீ தேவானந்த் இதற்கான ஒருங்கிணைப்புப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.