கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

249 0

முதற் தடவையாக கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக வெற்றி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பலமுறை இதுபோன்று கோப் குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதும், மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அவை அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எதனையும் மறைக்க அல்லது புறந்தள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய வங்கி விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது மேலும் சுட்டிக்காட்டிய முஜிபூர் ரகுமான், அனைத்தும் ஒழுங்கு முறைப்படி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், அரசாங்கத்தால் இரண்டு வருடங்களில் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என நான் கூறவில்லை என குறிப்பிட்ட அவர், சில சில குறைபாடுகள் உள்ளது, அதனை சீர் செய்து முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.