தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கக் கூடாது – ஐ.தே.க.

276 0

நாட்டின் தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விரிவான வேலைத் திட்டத்தின் மூலமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும் என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மக்களின் சுமையை குறைக்க விரும்புவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரினால் நிதி நெருக்கடியை தீர்த்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.