வீட்டுக்கு வரும் தடுப்பூசி சேவை

189 0

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாக, கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜ.எல்.எம். றிபாஸ், இன்று (20) தெரிவித்தார்.

ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் வீடு, வீடாக கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, வெளிநாடு செல்பவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலாவது, இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் முழுமையாக பாதுகாக்க முடியுமெனவும் தெரிவித்தார்.