சிட்டுக்குருவியின் கீச், கீச் இசை…….

798 0

இன்று உலக சிட்டுக்குருவி தினம்

மார்ச் 20 ஆம் நாள் உலக சிட்டுக் குருவிகள் தினம். இயற்கை ஆர்வலர்களின் இதயம் கவர்ந்த இந்த சின்னஞ்சிறு பறவை இனம் எங்கு எந்த பக்கம் திரும்பினாலும் காண கிடைக்கும் பறவையாகத்தான் எம் கண்முன்னால் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

சிட்டுக்குருவியை’ சுறுசுறுப்பு, காதல், தனிமை, தன்னம்பிக்கை, நட்பு எனப் பல விஷயங்களுக்கு நாம் உதாரணப்படுத்தலாம்.

பறவைகளில் சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பான பறவையைக் காண்பது அரிது. ஆயினும் இன்று சிட்டுக்குருவிகள் அரிதான பறவையினங்களில் ஒன்றாகி வருகின்றன. காரணம் நாம் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகள் தான்.

கைத்தொலைபேசிகளில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளைத் தாங்கும் சக்தி சிட்டுக்குருவிகளின் இதயத்துக்கு இல்லாத காரணத்தாலேயே முன்பெல்லாம் வீடுகளின் முற்றங்களில் நமக்குக் காணக்கிடைத்த ஏராளமான சிட்டுக்குருவிகள் மடிந்து போய் இன்று எங்கேனும் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளை மட்டுமே ஏதோ புறநகர்ப் பகுதிகளில் மட்டுமேனும் காண முடிகிறது.

சிட்டுக்குருவிகளின் அழிவு இயற்கைச் சமநிலையின்மையின் உதாரணமெனக் கொள்ள வேண்டியது அவசியம்.

‘இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி”. “தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தனது யாத்திரையை தொடங்கினார்.

சிட்டுக்குருவி போல சுறுப்பான தமிழீழ தேசியத்தலைவர் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிக அக்கறை காட்டினார். குருவிகளின் பாதுபாப்பை கருத்தில் கொண்டு தொலைபேசி கோபுரங்கள் நிறுவுவதை தவிர்த்தார். வெளிநாட்டு தலைவர் ஒருவரரை சந்தித்த வேளை இத்தகவலை பரிமாறினார்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள் நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற சில காரணங்கள் தான் சிட்டுக் குருவி என்ற இந்த சிற்றினத்தை அழிவுப் பாதையில் தள்ளி இருக்கின்றன.

காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. இந்த சிட்டுக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 13 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளை பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது.

சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.

வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி வீடு முழுவதும் குளீருட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப்புகையால் காற்று மாசடைந்து குருவிகளை வாழவைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினியால் அழிந்து வருகிறது.

வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவும் உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன. அலைபேசிகளின் வருகைக்கு பின்னர் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது .

இன்று தொடர்பாடல் துறையில் சமூக ஊடகங்களில் ருவிற்றர் முதன்மையாக உள்ளது. சிட்டுக்குருவியின் கீச்சு கீச்சு என்று கத்தும் மெல்லிய இசைதான் இந்த ருவிற்றருக்கான (Twitte)  பெயருக்கான காரணம் ஆகும்

இனி வரும் தலைமுறையினருக்கு சிட்டுக்குருவிகளை நாம் இணையத்திலோ அல்லது புகைப்படங்களிலோ தான் அடையாளம் காட்ட வேண்டியதாக இருக்குமோ என்னவோ?!