பிரித்தானிய பிரதமர் இன்று பதவி விலகுகிறார்.

408 0

david-cameronபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் இன்றுடன் பதவி விலகுகிறார்.

இதன்படி இதுவரையில் உள்விவகார செயலாளராக இருந்து தெரேசா மே பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து தீர்மானத்தை அடுத்து, தாம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் பதவி விலகுவதாக பிரதமர் கமரன் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவரது கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிய தலைவருக்கான போட்டி நிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கான ஓட்டத்தில் தெரேசா மே மாத்திரமே எஞ்சிய நிலையில், இன்றுடன் தாம் பதவி விலகுவதாக டேவிட் கமரன் அறிவித்துள்ளார்.

இதன்படி, நேற்றையதினம் அவர் தமது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்தி இருந்ததுடன், அவருக்கு பிரியாவிடையும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.