பொலிஸ் ஜீப் வாகனம் கவிழ்ந்து விபத்து!

208 0

நுவரெலியா டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் செலுத்தி சென்ற சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் வழியில் இன்று மாலை 2.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் பாதையை விட்டு விலகி 15 அடி உயரத்திலிருந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். விபத்தில் கெப் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.