உர நெருக்கடியால் தேயிலை தொழில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது

186 0

இரசாயன உரங்களை இல்லாது செய்யும் அரசாங்கத்தின் தற்காலிக தீர்மானத்தினால் தேயிலை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களிலுள்ள தேயிலைத் தோட்டங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்வு மாத்தறையில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மாத்தறை மாவட்டத்திலுள்ள பாரிய மற்றும் நடுத்தர தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், அரசாங்கம் தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக, தொழில்துறையை முற்றாக அழித்து வருகிறது.

“நாங்கள் உரத்தை 1,500 ரூபாவிற்கு கொள்வனவு செய்தோம். இப்போது அது சுமார் 8.500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.