கொழும்பில் இன்று இளைஞர்கள் போராட்டம்!

165 0

சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அரச வளங்கள் விற்பனை மற்றும் பல விடயங்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு டெக்னிக்கல் சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அரசாங்கம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் எனினும் தற்போது நாட்டின் குடிமக்கள் பாரிய சுமைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடன் பெற்று, அரச வளங்களை விற்று, திருடுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு சொத்துக்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட முகாமையாளர்கள் போன்றவர்கள் என்றும், நாடு ஒரு பாரிய சொத்து போன்றது எனவும் அவர் தெரிவித்தார்

ஆட்சியாளர்கள் 74 ஆண்டுகளாக சொத்தின் சில பகுதிகளை விற்றதாகவும், இப்போது எஞ்சியிருப்பது எங்கள் வீடுகள் மாத்திரமே என்றும் அவர் கூறினார். எனவே இளைஞர்கள் எழுச்சி பெற்று போராட வேண்டும்.