கண் சத்திர சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு

173 0

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை உபகரணம் ஒன்று, அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் ( IMHO)அன்பளிப்புச் செய்யப்பட்டது.

நீண்ட காலமாக கண் சத்திர சிகிச்சைக்காக கண் துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் இல்லாமையால் பல சிரமங்களை நோயாளிகள் எதிர்நோக்கிவந்தனர்.

இதனை கருத்தில்கொண்டு, கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் என்.நிரோஷனின் வேண்டுகோளுக்கு இணங்க, கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா. முரளீஸ்வரனின் நீண்ட நாள் முயற்சியின் பயனாக, அனைத்துலக மருத்துவநல அமைப்பிலிருந்து 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் கிடைக்கப் பெற்றது.

இதனை அனைத்துலக மருத்துவநல அமைப்பு (அமெரிக்கா) சார்பாக இருதய நோய் வைத்திய நிபுணர் டொக்டர் அருள்நிதி ,வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கையளித்தார்.

மேலும், இவ் “அனைத்துலக மருத்துவநல அமைப்பு” (IMHO) பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை இவ் வைத்தியசாலையில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.