18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்க சட்டத்தில் திருத்தம்

181 0

நாட்டில் 18 வயதுக்கு குறைவானவர்களை சிறுவர்களாகக் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்காமலிருக்கும் வகையில் குற்றவியல் வழக்கு கோவை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதேனுமொரு நபர் குற்றமிழைக்கும் போது, குறித்த நபரின் வயது 18 வயதுக்குக் குறைவாயின் மரண தண்டனை வழங்குவதைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நீதி வழங்கலுக்கான உடன்பாட்டின் குறைந்தபட்ச ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக அமையும் வகையில், குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.