தென்னகத்தை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு – எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

175 0

கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டன என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, மக்களவையில் ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி கனிமொ ழி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டன.

தென்னிந்திய ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார்.