24 கரட் தங்க பவுணொன்றின் விலை 150,000 ஆக உயர்வு

164 0

அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 265 ரூபாவாக அதிகரித்துள்ளது. டொலரின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் என்றும், விற்பனை விலை 259 ரூபா 99 சதம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நேற்யை தினம் தனியார் வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 265 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேபோன்று தங்கத்தின் விலையும் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 50,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதே போன்று 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 39,000 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் மோதலே இவ்வாறு தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பதற்கான காரணமாகும் என்று கொழும்பின் பிரதான தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமையால் உள்ளுரில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வாறான நிலைமை ஏற்படும் போது ஊழியர்கள் வீதிக்கு இறங்கி போராடுவர். எனவே இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். இந்த நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தி துரித தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.