ஷிரந்தி ராஜபக்ஷவின் செயற்பாடு! குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரம்!!

367 0

கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஷிரந்தி தொடர்பில் தற்போது வரையில் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் குழுவிற்கு பாரிய சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விசாரணை குழுவினால் அலரி மாளிகையின் தொலைப்பேசி இலக்கம் தொடர்பிலான அறிக்கை பல மாதங்களாக விசாரணைக்காக கோரப்பட்டுள்ளது.இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்பு பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் அந்த தொலைப்பேசி இலக்கம் தொடர்பில் தகவல் வழங்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகிறது.

பிரதி பொலிஸ்மா அதிபர் விக்ரமசிங்கவின் இந்த தடையேற்படுத்தும் செயற்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினால் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதனை தொடரந்து அந்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு நீதவான் ஜனாதிபதி ஊழியர் சபை பிரதானியிடம் உத்தரவிட்டுள்ளார்.

அந்த தகவல் கிடைத்ததன் பின்னர் தொலைப்பேசி இலக்கங்களை விசாரணை குழுவினர் ஆராய்ந்து பார்க்கும் போது, கொலை இடம்பெற்ற தினத்தன்று இரவு ஒரு தொலைப்பேசி இலக்கத்தில் இருந்து 41 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை மேற்கொள்ளும் போது குறித்த தொலைப்பேசி இலக்கம், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் தனிப்பட்டது என உறுதியாகியுள்ளது.

இந்த தொலைப்பேசி இலக்கங்களிலிருந்து அதிகமானவை அப்போதைய நாரஹென்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தொலைப்பேசி இலக்கத்திற்கும், அப்போதைய கல்கிசை தலைமையக பொலிஸ் பரிசோதகரின் தொலைப்பேசிக்கு நள்ளிரவு வரை அழைப்பு மேற்கொண்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளனர் என ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தௌவுப்படுத்துவதற்காக விரைவில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.