மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை புதிய அரசியமைப்பில் உட்சேர்தல் வேண்டும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

184 0

ஜனாதிபதி தேர்தல்,பொத்தேர்தல் மற்றும்மக்கள் தீர்ப்பு ஆகியவை குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களும் புதிய அரசியலமைப்பில் உட்சேர்த்தல் வேண்டும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவி காலத்தில் முதல் இரண்டு வருட காலங்களில் ஏதேனும் நோய் அல்லது வேறு விசேட நியாயமான காரணமின்றி அந்தக் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட மொத்த பாராளுமன்ற கூட்டங்களின் எண்ணிக்கையில் குறைந்தது மூன்றில் ஒன்றுக்காவது வருகை தராவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்தல் புதிய அரசியலமைப்பில் உருவாக்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கததிற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

பிரஜையின் வாக்குரிமையை நேரடியாக அடிப்படை உரிமையொன்றாக அரசியமைப்பில்உட்சேர்த்தல் வேண்டும். ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் மற்றும் மக்கள் தீர்ப்பு தொடர்பில் அரசியலமைப்பில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மாகாண சபைகள் தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்படாமலிருப்பது இத்தேர்தல்களில்காலத்திற்கு காலம் சிக்கல் நிலைமை தோற்றம் பெறுவதற்கு காரணியாக அமைகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

மாகாண சபை தேர்தல்,உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஆகியவற்றை புதிய அரசியலமைப்பில் உட்சேர்த்தல் வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தலுக்காக செலவழித்த நிதி மற்றும் வருமானம் ஆகிய உண்மை விபரங்களை தேர்தல் பெறுபேறு வெளியாகி 30 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தலை அரசியலமைப்பின் ஊடாக கட்டாயமாக்க வேண்டும்.

வேட்பாளர்களினால் வெளிப்படுத்தப்படும் தகவல்களை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தும் அதிகாரத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்க வேண்டும்.

ஆணைக்குழுவிற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வேட்பாளரது பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அவர் தெரிவாகியுள்ள பதவியை இரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பொன்றின்போது தற்போது குறித்த ஒரு விடயம் தொடர்பாக மாத்திரமே மக்களின் கருத்து வினவப்படுவதால் ஏதேனுமொரு சட்டத்தின் குறிப்பிட்ட சில விடயங்கள் சம்பந்தமான கட்டளை அல்லது பல கட்டளைகளுக்காக மக்களின் கருத்தை அறிந்துக்கொள்வதற்கு முடியுமான வகையில் ஏற்புடைய உறுப்புக்களை திருத்தியமைத்தல்.

பாராளுமன்ற,மாகாண சபை மற்றும் உள்ளூர் அதிகார சபைகளின் உறுப்பினரொருவரால் மேற்கொள்ளப்படும் ஏதேனும் தவறு சம்பந்தமாக நீதிமன்றினால் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த உறுப்பினர் அவரது பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவராயின் அதனை விசாரித்து அவரை பதவி நீக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சியொன்றினால் பாராளுமன்றத் தேர்தலுக்காக முன்வைக்கப்படும் பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் தேசியப்பட்டியலுக்கான  பெயர் குறித்த நியமனப்பத்திரத்தையும் வழங்க வேண்டுமெனவும், அந்த தேசியப்பட்டியல் உறுப்பினரை தேர்தலின் பின்னரான 7 நாட்களுக்குள் பெயர் குறிப்பிடாவிட்டால் பெயர் குறித்த நியமனப் பத்திரத்தில் முன்னுரிமை குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான அதிகாரம்தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் ஊடாக இளைஞர் மற்றும் பெண்களின் பிரதிநித்துவம் தொடர்பான சதவீதமொன்றை பாராளுமன்றம்,மாகாண சபைகள்உள்ளூர் அதிகார சபைகளின் வேட்பாளர்களின் பெயர் குறித்த நியமனத்தின்போது உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.