ஜெனிவா யோசனையை காலம் கடத்த அரசுக்கு உதவும் தமிழ் அரசியல்வாதிகள்!!

245 0

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த யோசனையின் எந்த பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை செயற்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசத்தை கோர இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 34 வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் மேற்படி கோரிக்கை முன்வைக்க திட்டமிட்டுள்ளதுடன் இதற்கு சில தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களும், சில சிவில் அமைப்புகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்க அரசாங்கம் இதனை செய்வதாகவும் இதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரவளிப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.