அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளது- லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்

258 0

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனையும் குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் அதிஷ்ட இலாபச் சீட்டுக்களுக்கான விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இதற்கு எதிராக லொத்தர் விற்பனை முகவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து, முன்னைய விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று, ஜனாதிபதியால் பணிப்புரை வழங்கப்பட்டது.

எனினும் அதனை அதிகாரிகள் கருத்தில் கொள்ளாமை கவலையளிப்பதாக உள்ளது என்று லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கத்தின் அமைப்பாளர் அமில தியூணுகே தெரிவித்துள்ளார்.