பாரியளவில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

206 0

டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டாலோ அல்லது பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டாலோ தனியார் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாதிப்படையக்கூடும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலையேற்றத்தினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிக்கையில்,

“இன்று குறுகிய தூர பேருந்துகளை இயக்கும் போது நாளாந்தம் ரூ.5,500 நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி பேருந்துகளை இயக்க முடியாது. நேற்று குறைந்த விலைக்கு டீசல் வாங்கிய பேருந்துகள்தான் இன்று இயங்குகின்றன. 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 20% பேருந்துகள் நாளை மற்றும் நாளை மறுநாள் படிப்படியாக சேவையில் இருந்து விலகவுள்ளன. எங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறோம். இல்லையெனில், பெரிய கட்டண திருத்தத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,

பஸ்களுக்கு பழைய விலைக்கே எரிபொருளை பெற்றுக் கொடுத்தால், மற்றவை எவ்வளவு அதிகரித்தாலும் பேருந்து கட்டணத்தை திருத்த மாட்டோம். நாளைக்குள் முடிவு தெரிய வேண்டும். மானியம் வழங்கவில்லை என்றால், 15% பேருந்து கட்டண திருத்தத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும்.