இலங்கைக்கு ஒத்துழைப்பதில் அமெரிக்கா அர்ப்பணிப்பு

385 0

ug2மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முன்னேறிச் செல்கின்ற நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு ஒத்துழைப்பதில் அமெரிக்கா அர்ப்பணிப்பு கொண்டிருப்பதாக, அதன் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு முக்கிய ஆழத்தை அடைந்துள்ளது.

இரண்டு நாடுகளும் பொதுவான இலக்குகளை பங்கிட்டுக் கொள்கின்றன.

தற்போது இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பு ரீதியான சீர்ததிருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையின் முதலீட்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.