கிழக்கு இந்திய நகர பகுதிகளை தாக்கலாம் என நம்பப்படும் புவியதிர்வு ஒன்று பங்களாதேஷ் பகுதியில் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலகின் மிகப்பெரிய நதி படுகையின் கீழ் அமைந்துள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் இரண்டு கண்ட தட்டுக்களில் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த கண்ட தட்டு எல்லையில் பிளவு ஏற்பட்டால் சுமார் 14 கோடி பேர் பாதிக்கப்படுவர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நதிகளின் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு சிலியில் இடம்பெற்ற புவியதிர்வே இதுவரை காலமும் உலகில் ஏற்பட்ட ஆக பெரிய புவியதிர்வு என கருதப்படுகின்றது.
இதன்போது 2 லட்சத்து 30 ஆயிரம் பலியாகினர்.
இதற்கிடையில் பாரிய புவியதிர்வு ஒன்று காரணமாகவே, இமயமலை தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.