அத்தியாவசியமற்ற பொருட்கள் என பெயரிட்டு, பொருட்களின் பட்டியலொன்று இன்று (7) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சு இதற்கான தடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பொருட்கள் பட்டியலுக்கு அமைச்சரவை அனுமதியளித்த பின்னர், அது தொடர்பிலான் வர்த்தமானி அறிவித்தலை வெலியிடவுள்ளதாக நிதி அமைச்சின் செயலர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்வதற்கான வர்த்தமானியை வெளியிட அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த 600 பொருட்கள் அடங்கிய பட்டியல், அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்துக்கு சமர்ப்பிக்கப்ப்டவுள்ளதாக அறிய முடிகிறது.