இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கும் இந்து சமுத்திரத்தில் நிதிநிலையமாக இலங்கை செயற்படுவதற்கும் சீனா உதவிகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றின் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இரண்டு நாட்டு தலைவர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்படி இரண்டு தரப்பினரும் பாரம்பரிய நட்புறவு, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் ஒத்துழைப்புகள் குறித்த உடன்பாட்டுக்கு வந்ததாக சீன வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பு துறைமுகநகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய இரண்டும், சீனா இலங்கைக்கிடையேயான பொருளாதார உறவுகளுக்கு முக்கிய அபிவிருத்தி திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
இந்தநிலையில், சீனாவை பொறுத்தவரையில் இலங்கையின் சுய அபிவிருத்தி ஆளுமையை கட்டியெழுப்புவதற்கு உதவிகளை வழங்கவுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025