மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று(2) பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
கடந்த மாதம் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடர்ந்தும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மக்கள் முன்னிலையிலும் இவ்விடயம் தொடர்பான தெளிவூட்டல்களில் ஈடுபட்டிருந்தேன் .
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியினால் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அதன் பயனாக சட்டமா அதிபர், குறித்த வர்த்தமானி இறிவித்தலை இரத்துச் செய்துள்ளமையானது, பெருந்தோட்ட மலையக சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்ற பாரியதொரு வெற்றியாகும் என்றார்.