பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மானிப்பாயில் கையெழுத்து வேட்டை

272 0

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு கோரி அண்மை நாட்களாக யாழின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த செயற்றிட்டமானது தமிழ் தேசியக கூட்டமைப்பின் வாலிபர் அணியால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றையதினம் இக் கையெழுத்து வேட்டையானது மானிப்பாயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசனின் ஏற்பாட்டில், மானிப்பாயில் நடைபெறும் இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இச் செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.