இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பக்கிடிங்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அருகில் உள்ள கிசார் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆட்டம் கண்டன. வீடுகள், கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை