யாழ். போதனா மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா தொற்றாளர்!

222 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனாத் தொற்றாளர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், மீசாலை வடக்கைச் சேர்ந்த 45 வயதான இந்த நபருக்கு, கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்த அவருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நோய் அறிகுறிகள் தீவிரமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதற்கு மறுநாளான கடந்த 17ஆம் திகதி அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தபோது, அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மனைவி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.