யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இன்று ரயிலுடன் மோதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜ்குமார் ஜெயந்தினி என்ற 23 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் கர்ப்பிணி என்று கூறப்படுகின்றது.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து நடந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தை சைக்கிளுடன் கடக்க முற்பட்டபோது, சைக்கிள் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது என்றும், அதை எடுக்க முயன்று கொண்டிருந்தபோது, ரயிலுடன் மோதுண்டார் என்றும் கூறப்படுகின்றது.